திருகோணமலையில் அதிகாலையில் நேர்ந்த விபத்து; மயிரிழையில் உயிர் தப்பிய தம்பதி

Published on: 19 Oct 2025, 10:43 am

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் மின்கம்பங்கள், வீதி பெயர்பலகை என்பவற்றுக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

திருகோணமலையில் அதிகாலையில் நேர்ந்த விபத்து; மயிரிழையில் உயிர் தப்பிய தம்பதி

திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆசாத்நகர் பகுதியில் காரொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது காரில் பயணித்த கணவன் மனைவி ஆகியோர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் மின்கம்பங்கள், வீதி பெயர்பலகை என்பவற்றுக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

அக்கரைப்பற்றில் இருந்து திருகோணமலைக்கு திருமண வீடொன்றுக்கு பயணித்தபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சாரதியின் தூக்க கலக்கமே விபத்துக்கான காரணமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW