இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைப்பு
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5 கிகி, 5 கிகி மற்றும் 2.3 கிகி லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளைக் குறைப்பதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விலை திருத்தத்தின்படி அனைத்து வகையான உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளன.
பொதுமக்களால் பரவலாகப் பயன்படுத்தப்படும் 12.5 கிலோகிராம் எடையுடைய வீட்டுப் பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 12.5 கிலோகிராம் சிலிண்டரின் புதிய விற்பனை விலை 4,365 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 5 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 42 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,750 ரூபாவாக மாற்றமடைந்துள்ளது. மேலும், 2.3 கிலோகிராம் எடையுடைய சிறிய ரக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விற்பனை விலை 815 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.