விசாரணையின் பின் நாமல் ராஜபக்ஷ கைது: நீதிமன்றத்தில் முன்னிலை
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானக் கொள்வனவு விவகாரத்தில் 5 மணி நேர விசாரணைக்குப் பின் கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷ, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்ட கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைக்காக, அவர் இன்று வெள்ளிக்கிழமை ஆணைக்குழுவில் முன்னிலையானார்.
சுமார் 5 மணி நேர தீவிர விசாரணைக்குப் பின்னர் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு, நாமல் ராஜபக்ஷ ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து, அவர் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.