அடுத்த வாரம் முதல் அதிஷ்ட மழையில் நனையப்போகும் 4 ராசிகள்.. உங்க ராசி இதுல இருக்கா?

செப்டம்பர் 02, 2026 அன்று சுக்கிரன் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு நகர்கிறார். இந்த பெயர்ச்சி ரிஷபம், சிம்மம், துலாம், மகரம் ஆகிய ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை வழங்கப்போகின்றது.


அடுத்த வாரம் முதல் அதிஷ்ட மழையில் நனையப்போகும் 4 ராசிகள்.. உங்க ராசி இதுல இருக்கா?

நவகிரகங்களில் சுக்கிரன் மிகவும் சக்திவாய்ந்ததும், நேர்மறையான பலன்களை அளிப்பதுமான கிரகமாகும். ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றும் இந்த சுக்கிரன், தற்போது கன்னி ராசியில் நிலை கொண்டுள்ளார். இந்த நிலையில், வரும் செப்டம்பர் 02 ஆம் தேதி அவர் கன்னி ராசியிலிருந்து விலகி, தனது சொந்த ராசியான துலாம் ராசிக்குள் பிரவேசிக்கப் போகிறார்.

இந்த முக்கியமான கிரக மாற்றம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும், குறிப்பாக நான்கு ராசிக்காரர்களுக்கு இது தொழில், நிதி நிலை, உறவுகள் மற்றும் ஆரோக்கியம் என அனைத்து துறைகளிலும் மிகப்பெரிய நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவரப் போகிறது.

ரிஷப ராசி

ரிஷப ராசிக்காரர்களைப் பொறுத்தவரை, இந்த ராசியின் அதிபதியே சுக்கிரன் என்பதால் இந்த பெயர்ச்சி அவர்களுக்கு விஸேஷமான பலன்களை அளிக்கும். இதன் மூலம் அவர்களின் சமூக அந்தஸ்தும், அங்கீகாரமும் உயரும். புதிய திட்டங்களும் பொறுப்புகளும் அவர்களின் நற்பெயரை மேலும் மேம்படுத்தும். நீண்டகாலமாக நிலவி வந்த நிதி சிக்கல்கள் இந்த காலகட்டத்தில் முடிவுக்கு வந்து, அவர்களின் பல ஆசைகள் நிறைவேறும். வாழ்க்கைத் துணையுடனான புரிதலும் அன்பும் பெருகும்; உடல் மற்றும் மன ஆரோக்கியம் சிறக்கும். மேலும், வியாபாரிகள் இந்த சமயத்தில் பெரும் லாபத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உருவாகும்.

சிம்ம ராசி

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த சுக்கிரனின் ராசி மாற்றம் அற்புதமான வளர்ச்சியை அளிக்கும். பொருள் வசதிகள் மற்றும் நிதி நிலைத்தன்மை மேம்படும், நீண்டகாலமாக எதிர்பார்த்த ஆசைகள் நிறைவேறி மனநிறைவு கிட்டும். குடும்பத்தினருடன் தரமான நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும், வீட்டில் அமைதியான மற்றும் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். இந்த காலகட்டத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள இது அவர்களை ஊக்குவிக்கும்.

துலாம் ராசி

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த சுக்கிரன் பெயர்ச்சி மேலும் சிறப்பானது. ஏனெனில் சுக்கிரன் அவர்களின் லக்கினத்தில் நுழைவதால், நீண்ட நிலுவையில் உள்ள பணிகளை அவர்களால் முடிக்க முடியும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு எதிர்பார்க்கலாம். வியாபாரிகள் தங்கள் கடின உழைப்பின் மூலம் தொழிலை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லலாம்; இந்த நேரத்தில் செய்யப்படும் முதலீடுகள் பெரும் லாபத்தை தரும். புதிய சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்புகளும் உண்டு, மேலும் குடும்பத்துடனான பந்தமும் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

மகர ராசி

மகர ராசிக்காரர்களுக்கு இந்த சுக்கிர பெயர்ச்சி அதிர்ஷ்டக் கதவுகளைத் திறக்கும் வகையில் அமையும். நிலுவையில் உள்ள பணிகள் முடிவுக்கு வந்து அவர்கள் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பார்கள். பணியிடத்தில் அவர்களின் உழைப்பு பாராட்டப்படும்; புதிய வேலை தேடும் நபர்களுக்கு அவர்களின் கனவுகள் நிறைவேறும். சம்பள உயர்வும், புதிய வருமான ஆதாரங்களும் கிடைக்கும். காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வந்து, இனிமையான காலகட்டம் தொடங்கும்.

இருப்பினும், இக்கட்டுரையில் உள்ள ஜோதிடக் குறிப்புகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க