வவுனியாவில் சோகம்: தாயைக் கொலை செய்துவிட்டு மகன் தற்கொலை
வவுனியா தோணிக்கல் பகுதியில் ஏற்பட்ட குடும்ப தகராறில் தாயைக் கூர்மையான ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்துவிட்டு மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வவுனியா, தோணிக்கல் பகுதியில் தாயைக் கூர்மையான ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்துவிட்டு, மகன் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடும்பத்தில் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறிச் சென்றதன் காரணமாக, மகன் தனது தாயைக் கூர்மையான ஆயுதத்தால் கடுமையாகத் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தாயைக் கொலை செய்த பின்னர், மகன் அதே வீட்டில் இருந்த அருகிலுள்ள அறைக்குச் சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் தொடர்பில் வவுனியா காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.