மகாவலி கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மகாவலி கங்கையின் மேல் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழையால் பஸ்பாகே கோரளை தாழ்நிலப் பகுதிகளுக்கு சிறியளவிலான வெள்ள அபாய எச்சரிக்கையை நீர்ப்பாசனத் திணைக்களம் விடுத்துள்ளது.


மகாவலி கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மகாவலி கங்கையை அண்டியுள்ள தாழ்நிலப் பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக நீர்ப்பாசனத் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மகாவலி கங்கையின் மேல் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, பஸ்பாகே கோரளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மகாவலி கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளில் சிறியளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.

இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் குறித்த வீதிகளைப் பயன்படுத்தும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அத்துடன், மகாவலி கங்கைக்கு அண்மித்த பகுதிகளில் வாழும் பொதுமக்கள் விழிப்புடன் இருந்து, பாதுகாப்பிற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க