நெதன்யாகுவின் சிகை அலங்காரத்திற்கு 15 கோடி செலவு செய்த இஸ்ரேல் அரசு
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது மனைவியின் சிகையலங்காரம், ஒப்பனைக்காக ரூ.4.04 கோடி செலவிடப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது மனைவி சாராவின் சிகையலங்காரம், ஒப்பனை உள்ளிட்ட தோற்றம் சார்ந்த செலவுகளுக்காக கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2026-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை 15 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலைச் சேர்ந்த வழக்கறிஞர் விங்க்லர் ஷலித் என்பவர், கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிரதமரின் ஒப்பனை மற்றும் சிகையலங்கார செலவுகள் குறித்த விவரங்களைக் கோரியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள மாதவாரி செலவுப் பட்டியலில், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பிரதமர் மேற்கொண்ட தோற்றம் சார்ந்த செலவுகளுக்காக மொத்தம் 4.49 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதில் 90 சதவீதமான தொகை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது மனைவி சாராவுக்கு மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.