16 வயது மாணவருடன் உடலுறவு – 30 வயது பெண் ஆசிரியர் கைது! நீதிமன்றத்தில் அதிர்ச்சி தகவல்கள்!
இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் பகுதியில், 16 வயது மாணவருடன் பாலியல் உறவு வைத்திருந்த குற்றச்சாட்டில் 30 வயது உடற்கல்வி ஆசிரியை பிரோன்வென் ஜேம்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொதுவாக மாணவர்களை நல்வழிப்படுத்தும் ஆசிரியர்கள் பலரை நாம் பார்த்திருந்தாலும், சில வேளைகளில் ஆசிரியர்களே எல்லை மீறும் சம்பவங்களும் நடக்கின்றன. அந்த வகையில், இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றிய 30 வயதான பிரோன்வென் ஜேம்ஸ், 16 வயது மாணவருடன் உடலுறவு கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
வின்செஸ்டர் கிரவுன் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், அரசு தரப்பு வழக்கறிஞர் எட்வர்ட் கல்வர் கூறுகையில், "மாணவர் முதலில் ஸ்னாப்சாட்டில் ஜேம்ஸை நட்பு பட்டியலில் சேர்க்க முயன்றார். முதலில் நிராகரித்த ஜேம்ஸ், பின்னர் அவரது கோரிக்கையை ஏற்றார். அதன்பிறகு இருவரும் மெசேஜ் மூலம் பேச தொடங்கினர். ஆரம்பத்தில் இயல்பான உரையாடலாக இருந்தது, பின்னர் அது காதலாகவும், பாலியல் ரீதியான மெசேஜ்களாகவும் மாறியது. பின்னர் இருவரும் காரில் முத்தமிட்டனர்" என்றார்.

மற்றொரு சந்தர்ப்பத்தில், டென்னிஸ் போட்டியை டிவியில் பார்த்தபோது, இருவரும் முத்தமிட்டு பாலியல் உறவில் ஈடுபட்டதாகவும், மாணவரை காதல் என்ற பெயரில் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகவும் அரசு தரப்பு குற்றம்சாட்டியது.
மாணவர் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில், "ஆரம்பத்தில் இந்த உறவு தனக்கு நல்லது போல இருந்தது, தனது விருப்பத்திற்கு உட்பட்டே எல்லாம் நடந்தது. ஆனால், சிறிது காலத்திற்குப் பிறகு, தான் திட்டமிட்டு இந்த உறவுக்குள் இழுக்கப்பட்டதை உணர்ந்தேன்" என்று குறிப்பிட்டார்.
மாணவருடனான உடலுறவு உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் ஜேம்ஸ், தன்மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்து, நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமான அறிக்கையையும் தாக்கல் செய்துள்ளார். வழக்கின் அடுத்த கட்ட விசாரணை விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.