67 வயது கணவரை உலக்கையால் அடித்து கொலை செய்த மனைவி – அதிர்ச்சி சம்பவம்

Published on: 08 Dec 2025, 08:31 am

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

காவல்துறை தரப்பின்படி, குடும்பத்தில் நீண்ட நாளாக இருந்த முரண்பாடுகள் வலுத்த நிலையில், மனைவி வீட்டில் கிடந்த உலக்கையை எடுத்து கணவரைத் தாக்கியுள்ளார்.

67 வயது கணவரை உலக்கையால் அடித்து கொலை செய்த மனைவி – அதிர்ச்சி சம்பவம்

அனுராதபுர மாவட்டத்தின் மிஹிந்தலை பிரதேசத்தில் குடும்ப தகராறு ஒன்று முடிவில் கொலைக்கு வழிவகுத்துள்ளது. இச்சம்பவத்தில், 67 வயதான ஓய்வு பெற்ற கணவரை அவரது மனைவி வீட்டில் இருந்த உலக்கையைக் கொண்டு தலையில் அடித்து கொலை செய்ததாக மிஹிந்தலை காவல்துறை தெரிவித்துள்ளது.

இறந்தவர் ஆனந்த சிசிரகுமார் (67) என்பவராவார். இரு பிள்ளைகளின் தந்தையான இவர், ரஜரட்ட ரட அபிவிருத்தி வங்கியில் பணியாற்றிய பின்னர் ஓய்வு பெற்று மிஹிந்தலை கிரிந்தேகமவில் வாழ்ந்து வந்தார்.

காவல்துறை தரப்பின்படி, குடும்பத்தில் நீண்ட நாளாக இருந்த முரண்பாடுகள் வலுத்த நிலையில், மனைவி வீட்டில் கிடந்த உலக்கையை எடுத்து கணவரைத் தாக்கியுள்ளார்.

தாக்குதலில் பலத்த தலைக்காயம் அடைந்த சிசிரகுமார், முதலில் மிஹிந்தலை மருத்துவமனையிலும், பின்னர் அனுராதபுரம் போதனா மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிரிழந்துள்ளார்.

இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடையதாக 67 வயதான அவரது மனைவி, மிஹிந்தலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW