ஐபோன் மற்றும் பைக்கிற்காக தாத்தாவை கொன்ற 13 வயது பேத்தி – காதலனுடன் சதி!

Published on: 20 Aug 2026, 08:43 am

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

கேரள ஆலப்புழாவில் 13 வயது சிறுமி, ஐபோன் மற்றும் காதலனின் பைக் ஆசைக்காக தனது தாத்தாவை கொலை செய்த கொடூர சம்பவம். 3 பவுன் நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்த நான்கு பேரையும் போலீஸார் கைது செய்து சீர்திருத்தப் பள்ளியில் அடைத்துள்ளனர்.

ஐபோன் மற்றும் பைக்கிற்காக தாத்தாவை கொன்ற 13 வயது பேத்தி – காதலனுடன் சதி!

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் கருவற்றா பகுதியில், 13 வயது பேத்தியின் பேராசை கொடூரக் கொலைக்கு வழிவகுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐபோன் வாங்க வேண்டும் என்ற ஆசையிலும், தனது காதலனுக்கு புதிய மோட்டார் சைக்கிள் வாங்கித் தர வேண்டும் என்ற நோக்கிலும், சிறுமி தனது காதலனை ஏவி விட்டு தாத்தாவையே கொலை செய்த சம்பவம் போலீஸ் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கொல்லத்தைச் சேர்ந்த 65 வயது முதியவர் ஒருவர், தனது மனைவி, மகள் மற்றும் எட்டாம் வகுப்பு படிக்கும் 13 வயது பேத்தியுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு, முதியவரின் மகள் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், அவரது மனைவியும் அங்கேயே துணைக்கு தங்கியிருந்தனர். இந்த சூழ்நிலையில், முதியவரும் அவரது பேத்தியும் மட்டும் வீட்டில் தனியாக இருந்தனர்.

இந்த நேரத்தில் தனிமையில் இருந்த முதியவர், கொடூரமான முறையில் கொல்லப்பட்டு, அவரது உடல் ஓலைப் பாயில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. மேலும், அவரது கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் இருந்தன. உடலில் இருந்த 3 பவுன் நகைகள் மற்றும் அலமாரியில் இருந்த பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

இந்த சம்பவம் குறித்து ஹரிப்பாடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சைபர் கிரைம் பிரிவு உதவியுடன் செல்போன் டவர் தரவுகளை ஆய்வு செய்தனர். அப்போது, 13 வயது சிறுமி ஒரு சிறுவனுடன் தொடர்ந்து தொலைபேசியில் பேசியது தெரியவந்தது. இதையடுத்து அந்த சிறுவனை கைது செய்த போலீசார், கடுமையான விசாரணையில் பகீர் உண்மையை அறிந்தனர். 13 வயது சிறுமி ஒரு இளைஞனை (18-க்கு உட்பட்டவர்) காதலித்துள்ளார். இருவரும் தங்கள் ஆசைகளை நிறைவேற்றுவதற்காக சதி செய்துள்ளனர்.

தனக்கு ஐபோன் வாங்க வேண்டும், தனது காதலனுக்கோ ஒரு புதிய மோட்டார் சைக்கிள் வாங்கித் தர வேண்டும் என்ற முடிவு இல்லாத ஆசைகளே இந்தக் கொடூரச் செயலுக்கு காரணமாக அமைந்தன. பணத்திற்கு என்ன செய்யலாம் என்று யோசித்த இருவரும், தாத்தாவின் நகைகளையும் பணத்தையும் கொள்ளையடிக்கத் திட்டமிட்டனர்.

அதன்படி, சிறுமியின் காதலனும் அவனது இரு நண்பர்களும் வீட்டிற்குள் நுழைந்து முதியவரைக் கொலை செய்து கொள்ளையடித்தது பின்னர் தெரியவந்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சிறுமி உள்பட நான்கு பேரையும் போலீஸார் கைது செய்து, அவர்களை சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW