சாப்பிட்டவுடன் தூங்குவதால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள்: மருத்துவர்கள் எச்சரிக்கை
இரவு உணவு உண்ட உடனேயே தூங்குவதால் நெஞ்செரிச்சல், செரிமானக் கோளாறு, உடல் எடை அதிகரிப்பு மற்றும் நீரிழிவு பாதிப்புகள் ஏற்படக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இரவு உணவு உண்ட உடனேயே தூங்கச் செல்லும் வழக்கம் பலரிடம் காணப்படுகிறது. ஆனால், இவ்வாறு சாப்பிட்ட உடனே படுப்பது உடலுக்குப் பல்வேறு தீவிரசாப்பிட்டவுடன் தூங்கும் பழக்கத்தால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள்: மருத்துவர்கள் எச்சரிக்கை
இரவு உணவு உண்ட உடனேயே தூங்கச் செல்லும் வழக்கம் பலரிடம் காணப்படுகிறது. ஆனால், இந்த பழக்கம் பல்வேறு உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
சாப்பிட்ட உடனேயே படுக்கும்போது, புவியீர்ப்பு விசை காரணமாக வயிற்றுப் பகுதியில் உள்ள அமிலங்கள் தொண்டைப் பகுதியை நோக்கி மேல்நோக்கி வரக்கூடும். இதன் காரணமாகக் கடுமையான நெஞ்செரிச்சல், செரிமானம் தாமதமாவதால் ஏற்படும் வயிறு உப்புசம், அஜீரணம் மற்றும் குடல் சார்ந்த அசௌகரியங்கள் ஏற்படுகின்றன.
மேலும், சாப்பிட்டு முடித்த உடனே உறங்குவதால் உணவில் உள்ள கலோரிகள் முறையாக எரிக்கப்படாமல் கொழுப்பாக மாறும் சூழல் உருவாகிறது. இது தேவையற்ற உடல் எடை அதிகரிப்பு மற்றும் தொப்பைக்கு வழிவகுக்கிறது.
வயிற்றுப் பகுதியில் ஏற்படும் அசெளகரியம் காரணமாக ஆழ்ந்த தூக்கமும் பாதிக்கப்படுகிறது. இந்தத் தவறான பழக்கம் நீண்ட காலம் தொடரும் பட்சத்தில், அது நீரிழிவு மற்றும் இதயம் தொடர்பான தீவிர நோய்களுக்கும் காரணமாக அமையலாம்.
எனவே, இரவு உணவு சாப்பிட்டவுடன் படுக்கைக்குச் செல்லாமல் சிறிது நேரம் அமர்ந்திருப்பது அல்லது மெதுவாக நடைப்பயிற்சி மேற்கொள்வது உடலுக்கு நல்லது என அறிவுறுத்தப்படுகிறது. குறிப்பாக, இரவு உணவிற்கும் தூங்குவதற்கும் இடையே குறைந்தபட்சம் இரண்டு மணி நேரமாவது இடைவெளி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மருத்துவ வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.