அதிக நேரம் மொமைல் திரையை பயன்படுத்துபவரா நீங்கள்?  உங்கள் அழகுக்கு ஏற்படும் ஆபத்து பற்றி தெரிந்துகொள்ளுங்கள்!

அதிக நேர திரைப் பயன்பாடு, தூக்கமின்மை மற்றும் முறையற்ற வாழ்க்கை முறையால் ஏற்படும் சருமப் பாதிப்புகள் மற்றும் அவற்றைத் தடுக்கும் எளிய பராமரிப்பு வழிகள்.


அதிக நேரம் மொமைல் திரையை பயன்படுத்துபவரா நீங்கள்?  உங்கள் அழகுக்கு ஏற்படும் ஆபத்து பற்றி தெரிந்துகொள்ளுங்கள்!

கணினி, மடிக்கணினி மற்றும் கைபேசி திரைகளுக்கு முன்னால் அதிக நேரம் செலவிடுவது அன்றாட வழக்கமாகிவிட்ட நிலையில், அதனுடன் தொடர்புடைய வாழ்க்கை முறை மாற்றங்கள் சரும ஆரோக்கியத்தை வெகுவாகப் பாதிக்கின்றன. 

திரைகளில் இருந்து வெளியாகும் நீல நிற ஒளியை விடவும், தொடர் பயன்பாட்டினால் ஏற்படும் தூக்கமின்மை, மனஅழுத்தம் மற்றும் உடற்பயிற்சியின்மை ஆகிய காரணிகளே சருமப் பொலிவை இழக்கச் செய்து முகப்பரு உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

இரவு வேளையில் நீண்ட நேரம் திரைகளைப் பார்ப்பது இயல்பான உறக்கச் சுழற்சியைப் பாதிக்கிறது. முறையான தூக்கமின்மை மற்றும் தொடர் மனஅழுத்தத்தால் ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மை சரும அழற்சி, தீவிர முகப்பரு, சரும உணர்திறன் அதிகரிப்பு மற்றும் முடி உதிர்தல் போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. எனவே, அதிக விலை கொண்ட சீரம்களைப் பயன்படுத்துவதை விட முறையான உறக்கத்தைப் பெறுவதே ஆரோக்கியமான சருமத்திற்கு அடிப்படையாக அமைகிறது.

அலுவலகம் அல்லது வீடுகளுக்குள் இருந்து வேலை செய்தாலும் சூரிய ஒளித் தடுப்பு கிரீம்களைத் தவறாமல் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக ஜன்னல் அருகில் அமர்ந்து பணியாற்றுபவர்கள் பரந்த அளவிலான பாதுகாப்பு தரும் சன்ஸ்கிரீனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அத்துடன், நீல ஒளி மற்றும் புலப்படும் ஒளியில் இருந்து இந்தியச் சருமத்தைப் பாதுகாக்க இரும்பு ஆக்சைடு அடங்கிய சாயம் கலந்த சன்ஸ்கிரீன்களைப் பயன்படுத்துவது சிறந்தது.

தொடர்ந்து இயங்கும் குளிர்சாதன வசதியால் அறைகளில் ஈரப்பதம் குறைந்து சருமம் வறண்டு பொலிவிழக்கக்கூடும். இதனைத் தவிர்க்க முகம், கழுத்து மற்றும் கைகளுக்குத் தகுந்த ஈரப்பதமூட்டும் மாய்ஸ்சரைசர்களைப் பயன்படுத்த வேண்டும். உதடுகளுக்கு லிப் பாம் மற்றும் கண்களுக்குக் கீழ் உள்ள பகுதிக்கு ஹைட்ரேட்டிங் ஐ கிரீம்களைப் பயன்படுத்துவது சருமத்தை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவும்.

கைபேசிகளைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது அதில் படியும் எண்ணெய், வியர்வை மற்றும் அழுக்குகள் முகத்தில் படுவதன் மூலம் முகப்பரு அதிகரிக்கிறது. இதனால் கைபேசித் திரையைத் தவறாமல் துடைத்துத் தூய்மையாகப் பராமரிப்பதோடு, அன்றாட வாழ்க்கை முறைக்கு ஏற்ற சருமப் பராமரிப்புப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவது ஆரோக்கியத்திற்கு அவசியமாகும்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க