சவூதியில் உள்ள இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு

ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களைத் தொடர்ந்து, சவூதி அரேபியாவில் உள்ள மற்றும் அந்நாட்டுக்குச் செல்லும் இலங்கையர்கள் அந்நாட்டு அரசின் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு ரியாத் இலங்கைத் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது.


சவூதியில் உள்ள இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு

யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் முன்னெடுத்து வரும் தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து, சவூதி அரேபியாவில் வசிக்கும் மற்றும் அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொள்ளும் இலங்கையர்கள் அந்நாட்டு அரசாங்கத்தின் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுமாறு ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. 

உறுதிப்படுத்தப்படாத தகவல்கள், காணொளிகள் மற்றும் சமூக ஊடகப் பதிவுகளைப் பகிர்வதைத் தவிர்த்து, உத்தியோகபூர்வ தகவல் மூலங்களை மட்டுமே நம்புமாறும் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் ஜெட்டாவிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தின் அன்றாடச் சேவைகள் வழமைபோன்று இயங்கி வருகின்றன. 

அவசர தூதரக உதவிகள் தேவைப்படுவோர் 054 947 7567 என்ற தொலைபேசி இலக்கத்தை நேரடியாகத் தொடர்புகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சவூதியின் ரியாத் கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மற்றும் யேமனின் ஏடன் சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஹூதி தாக்குதல்களால் பல்வேறு விமான நிறுவனங்கள் சேவைகளை இரத்துச் செய்துள்ளன.

கொழும்புக்கும் ரியாத்துக்கும் இடையிலான விமான சேவைகளும் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன், சவூதியின் அப்ஹா சர்வதேச விமான நிலையம் மீதான தாக்குதலில் சவூதி விமானி ஒருவரும், மொரோக்கோ மற்றும் அல்ஜீரியாவைச் சேர்ந்த இருவருமாக மூவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 28 பேர் காயமடைந்துள்ளனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க