அபாகஸ் பரீட்சையில் சித்திபெற்ற 500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டமளிப்பு மற்றும் பரிசளிப்பு விழா

SSRI HOMAC ஏற்பாட்டில் அபாகஸ் பரீட்சையில் சித்திபெற்ற 500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கான 23 ஆவது பட்டமளிப்பு மற்றும் பரிசளிப்பு விழா கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் விமரிசையாக நடைபெற்றது.


அபாகஸ் பரீட்சையில் சித்திபெற்ற 500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டமளிப்பு மற்றும் பரிசளிப்பு விழா

கொட்டகலை நிருபர்

SSRI HOMAC நிறுவனத்தின் ஏற்பாட்டில் சிறுவர்களின் மூளை விருத்தியையும் சிந்திக்கும் ஆற்றலையும் மேம்படுத்தும் நோக்கில் நடாத்தப்பட்ட அபாகஸ் பரீட்சையில் சித்திபெற்ற 500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கான 2026 ஆம் ஆண்டுக்கான 23 ஆவது பட்டமளிப்பு மற்றும் பரிசளிப்பு விழா கொழும்பில் மிக விமரிசையாக நடைபெற்றது.

கொழும்பு 07 இல் அமைந்துள்ள இலங்கை மன்றக் கல்லூரி (SLFI) கேட்போர்கூட மண்டபத்தில் நிறுவனத்தின் தலைமை அதிகாரி கலாநிதி செந்தில் குமார் பெருமாளின் ஆலோசனைக் கட்டமைப்பில், உதவிப் பணிப்பாளர் ஷியாமளா கண்ணன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் பிரதிப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எஸ். விஸ்வநாதன் மற்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கான சான்றிதழ்களையும் பரிசில்களையும் வழங்கி வைத்தனர்.

இலங்கை முழுவதிலும் உள்ள பல்வேறு பாடசாலைகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் அபாகஸ் பயிற்சியை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்து பரீட்சையில் வெளிப்படுத்திய திறமைகளைப் பாராட்டி இப்பட்டங்களும் விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

அத்துடன், இந்நிகழ்வில் மாணவர்களின் பெற்றோர்கள், கல்வியியலாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டதுடன், மாணவர்களுக்குச் சிறந்த முறையில் பயிற்சிகளை வழங்கி வழிகாட்டல்களை வழங்கிய ஆசிரியர்களும் இதன்போது விசேடமாகக் கௌரவிக்கப்பட்டனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க