முன்னாள் முதற்பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது

அரச வங்கியில் 10 மில்லியன் ரூபா முறைகேடு செய்த குற்றச்சாட்டில் முன்னாள் முதற்பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இன்று காலை கைது செய்துள்ளது.   


முன்னாள் முதற்பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியாரும் நாட்டின் முன்னாள் முதற்பெண்மணியுமான ஷிராந்தி ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் இன்று புதன்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்படுவதற்கு முன்னர், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் அவரது இல்லத்திற்குச் சென்று வாக்குமூலம் ஒன்றைப் பதிவுசெய்துள்ளனர். அரச வங்கியொன்றிலிருந்து 10 மில்லியன் ரூபா பணத்தைப் பெற்று, அதனை மோசடியாகப் பயன்படுத்தியதன் ஊடாக ஊழல் மற்றும் பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குற்றங்களை இழைத்துள்ளார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினர் தீவிரமாக முன்னெடுத்து வரும் அதேவேளை, முன்னெடுக்கப்படவுள்ள அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க