வீதி விபத்தில் யுவதி பலி: காதலியின் மரணச் செய்தியால் தவறான முடிவெடுத்த இளைஞன் மருத்துவமனையில் அனுமதி

எஹெலியகொட பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 26 வயது யுவதி உயிரிழந்த நிலையில், அவரது மறைவுச் செய்தியறிந்து விஷம் அருந்திய காதலன் ஆபத்தான நிலையில் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


வீதி விபத்தில் யுவதி பலி: காதலியின் மரணச் செய்தியால் தவறான முடிவெடுத்த இளைஞன் மருத்துவமனையில் அனுமதி

எஹெலியகொட பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவரது மறைவுச் செய்தியைக் கேட்டு மனமுடைந்த காதலன் விஷம் அருந்தி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரத்தினபுரி கத்தஹட்ட, போபத்தையைச் சேர்ந்த 26 வயதுடைய ஹன்சனி செவ்வந்தி என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பாடசாலைப் பருவத்திலிருந்தே இருவரும் காதலித்து வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த புதன்கிழமை மாலை எஹெலியகொடவிலிருந்து பரகடுவ நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, மஹிங்கொட துவ பகுதிக்கு அருகில் அதிவேகம் காரணமாக மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

எஹெலியகொட, விலேகொட பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞரே மோட்டார் சைக்கிளைச் செலுத்தியுள்ளார். விபத்தின்போது இருவரும் ஏதோ ஒரு விடயம் குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்ததாகவும், யுவதி தலைக்கவசம் அணிந்திருக்கவில்லை என்றும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த யுவதியை எஹெலியகொட ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோதும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். காதலியின் மரணத்தை அறிந்து அதிர்ச்சியடைந்த குறித்த இளைஞர், வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியதும் விஷம் அருந்தியுள்ளார்.

உடனடியாக எஹெலியகொட ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் தீவிர சிகிச்சைக்காக இரத்தினபுரி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க