பாடசாலைகளுக்கு பிள்ளைகளை அனுப்பாத பெற்றோருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்... பொலிஸார் எச்சரிக்கை!

பாடசாலைக்குச் செல்லாமல் தவிர்த்து வந்த 30க்கும் மேற்பட்ட பிள்ளைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மீண்டும் பாடசாலைகளில் இணைத்து வைத்ததுடன், பிள்ளைகளை அனுப்பாத பெற்றோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.


பாடசாலைகளுக்கு பிள்ளைகளை அனுப்பாத பெற்றோருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்... பொலிஸார் எச்சரிக்கை!

பாடசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தும் எவ்வித நியாயமான காரணங்களுமின்றி நீண்டகாலமாக கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடாமல் தவிர்த்து வந்த 30க்கும் மேற்பட்ட பிள்ளைகளை மீண்டும் பாடசாலைகளில் இணைக்கும் விசேட வேலைத்திட்டமொன்றை கிராண்ட்பாஸ் பொலிஸார் வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளனர்.

இதற்கமைய, அடையாளம் காணப்பட்ட அப்பிள்ளைகள் அனைவரும் சிங்கள, இந்து மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் மீள இணைக்கப்பட்டு அவர்களின் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. 

சம்பந்தப்பட்ட பாடசாலை அதிகாரிகளுடன் விரிவான கலந்துரையாடல்களை முன்னெடுத்து தகவல்களைத் திரட்டிய பொலிஸார், தமது நேரடித் தலையீட்டின் மூலம் தேவையான அனைத்து அத்தியாவசிய வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்து பிள்ளைகளை வகுப்பறைகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நியாயமான காரணங்களின்றி தமது பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பத் தவறும் பெற்றோருக்கு எதிராக எதிர்காலத்தில் சட்ட ரீதியான வழக்குத் தொடரப்படும் என கிராண்ட்பாஸ் பொலிஸார் இதன்போது மிகக் கடுமையான எச்சரிக்கையையும் விடுத்துள்ளனர்.

அத்துடன், இப்பிள்ளைகள் தங்களின் கல்வி நடவடிக்கைகளைத் தடையின்றித் தொடர்வதையும் அவர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் நோக்கில் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளும் திட்டமிடப்பட்டுள்ளன. இதற்காக சம்பந்தப்பட்ட பாடசாலைகளூடாக இப்பிள்ளைகள் தொடர்பான நாளாந்த வரவு மற்றும் கல்விச் செயற்பாட்டுத் தகவல்களைப் பெற்றுத் தொடர் கண்காணிப்பு முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தும் அபாயத்திலிருந்த பல சிறார்களின் எதிர்காலத்தை மீண்டும் ஒளிமயமாக்கும் நோக்கில் கிராண்ட்பாஸ் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட இந்த மனிதநேய நடவடிக்கை பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க