கல்விச் சுற்றுலா சென்ற 16 வயது மாணவன் நீரோட்டத்தில் சிக்கி உயிரிழப்பு

சமனலவெவ பகுதிக்குக் கல்விச் சுற்றுலா சென்ற பிபிலை பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவன் நீர்த்தேக்கத்தில் குளித்த போது நீரோட்டத்தில் சிக்கி உயிரிழந்தார்.


கல்விச் சுற்றுலா சென்ற 16 வயது மாணவன் நீரோட்டத்தில் சிக்கி உயிரிழப்பு

சமனலவெவ பகுதிக்குக் கல்விச் சுற்றுலா சென்ற போது நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு 16 வயது மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் பிபிலை, கிரியன்கும்புர பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மொனராகலை பகுதியிலிருந்து புறப்பட்ட இம்மாணவர் குழுவினர், சப்ரகமுவ பல்கலைக்கழகத்திற்குச் சென்றுவிட்டுப் பின்னர் குறகல புனித ஸ்தலத்தை நோக்கிப் பயணித்துள்ளனர். பயண வழியில் குறித்த குழுவினர் சமனலவெவ அணைக்கட்டுக்கு அருகில் பேருந்துகளை நிறுத்தியுள்ளனர்.

அப்போது பேருந்துகளில் ஒன்றில் பயணித்த மூன்று மாணவர்கள் அருகில் இருந்த நீர்த்தேக்கப் பகுதிக்குக் குளிக்கச் சென்றுள்ளனர். அவர்களில் ஒரு மாணவர் எதிர்பாராதவிதமாக நீரோட்டத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்த பொலிஸார், உள்ளூர் பொதுமக்களின் உதவியுடன் தீவிர தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தனர். நீண்ட தேடுதலுக்குப் பின்னர் குறித்த மாணவனின் சடலம் நீரிலிருந்து மீட்கப்பட்டது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க