கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றம் கட்டுப்பாட்டுக்குள்; பாதுகாப்புக்காக STF களமிறக்கம்
கொழும்பு மெகசின் சிறைச்சாலையின் E பிரிவில் ஏற்பட்ட கைதிகளுக்கிடையிலான மோதல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. பாதுகாப்பை உறுதி செய்ய STF அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கொழும்பு பொரளை மெகசின் சிறைச்சாலையின் ‘ஈ’ (E) பிரிவில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
நேற்று (06) இரவு சிறைச்சாலையின் E பிரிவில் கைதிகள் குழுவொன்றுக்கிடையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து அமைதியற்ற நிலை உருவானதாக தகவல்கள் வெளியாகின.
சுமார் 40 பேர் கொண்ட குழுவினருக்கிடையே இந்த மோதல் ஏற்பட்டதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்தின் காரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நிலைமையை கட்டுப்படுத்தவும், சிறைச்சாலையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் காவல்துறை மற்றும் சிறப்பு அதிரடிப்படை (STF) அதிகாரிகள் சம்பவ இடத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
காவல்துறை ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வூட்லர், தற்போது நிலைமை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.