உஷார்! குடல்வால் புற்றுநோயின் 7 எச்சரிக்கை அறிகுறிகள் இவையா?

குடல்வால் புற்றுநோய் (Appendix Cancer) உலகளவில் மிக அரிதான புற்றுநோய்களில் ஒன்றாகும். இளம் வயதினரிடையே இது அதிகரித்து வருவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


உஷார்! குடல்வால் புற்றுநோயின் 7 எச்சரிக்கை அறிகுறிகள் இவையா?

புற்றுநோய்களில் மிகவும் அரிதான ஒன்று குடல்வால் புற்றுநோய் (Appendix Cancer). உலகளவில் இது ஒவ்வொரு ஆண்டும் ஒரு மில்லியனுக்கு சுமார் 1 முதல் 2 பேரை பாதிக்கிறது. அமெரிக்காவில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1500 முதல் 3000 புதிய பாதிப்புகள் ஏற்படுகின்றன.

சமீபத்திய கண்டுபிடிப்புகளின்படி, இந்த குடல்வால் புற்றுநோய் இளம் வயதினரிடையே அதிகரித்து வருகிறது. இந்த புற்றுநோய் குறித்தும், அதன் எச்சரிக்கை அறிகுறிகள், காரணங்கள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்தும் சென்னையில் உள்ள கிளீனீகிள்ஸ் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை புற்றுநோயியல் நிபுணரான டாக்டர் விமலதித்தன் என். எஸ். அவர்கள் விரிவாகப் பகிர்ந்துள்ளார்.

குடல்வால் புற்றுநோய் என்றால் என்ன?

குடல்வால் புற்றுநோய் என்பது பெருங்குடலுடன் இணைந்திருக்கும் குடல்வால் (Appendix) பகுதியில் உருவாகும் அரிய வகை புற்றுநோயாகும். இதன் சிறப்பம்சம் என்னவென்றால், ஆரம்ப நிலையில் பலருக்கும் தெளிவான அறிகுறிகள் இருக்காது. சில நேரங்களில் அப்பெண்டிக்ஸ் அழற்சி (Appendicitis) சிகிச்சைக்காக குடல்வாலை அகற்றும்போது இது தற்செயலாக கண்டறியப்படுகிறது.

குடல்வால் புற்றுநோயின் 7 எச்சரிக்கை அறிகுறிகள்:

  1. தொடர்ந்து அல்லது மீண்டும் மீண்டும் வயிற்று வலி: வழக்கமான செரிமான பிரச்சனையைப் போலல்லாமல், தொடர்ந்து வலி ஏற்பட்டால் கவனிக்க வேண்டும்.

  2. வயிறு உப்புசம் அல்லது வீக்கம்: சாதாரணமாக வயிறு காற்று அடைப்பதை விட அதிகமாக வீக்கம் ஏற்பட்டால்.

  3. சாப்பிட்ட பிறகு வயிறு நிறைந்த உணர்வு: சிறிய அளவு உணவு சாப்பிட்டாலும் அதிக நேரம் வயிறு நிறைந்த உணர்வு இருந்தால்.

  4. குமட்டல் அல்லது வாந்தி: காரணமின்றி அடிக்கடி குமட்டல் அல்லது வாந்தி ஏற்பட்டால்.

  5. வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல்: மலம் கழிப்பதில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டால்.

  6. வயிற்றில் கட்டி அல்லது அதிகமாக நிறைந்த உணர்வு: வயிற்றில் ஏதோ கட்டி போன்ற உணர்வு இருந்தால்.

  7. பசியின்மை: உடல்நிலை சரியில்லாமல் பசி இல்லாமல் இருந்தால்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள இந்த அறிகுறிகள் இருந்தாலே குடல்வால் புற்றுநோய் என்று அர்த்தமில்லை. ஆனால் அறிகுறிகள் தொடர்ந்து இருந்தால் மருத்துவரை அணுகுவது மிகவும் முக்கியம்.

குடல்வால் புற்றுநோய்க்கான காரணங்கள்:

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் குடல்வால் புற்றுநோய் ஏற்படுவதற்கான சரியான காரணம் தெரியவில்லை. குடல்வால் பகுதியில் உள்ள சில செல்கள் கட்டுப்பாடில்லாமல் வளரத் தொடங்கும்போது புற்றுநோய் உருவாகிறது. சில கட்டிகள் மியூசின் (Mucin) என்ற ஜெல்லி போன்ற திரவத்தை உருவாக்கலாம். இது வயிற்றுக்குள் பரவும் போது 'சூடோமைக்ஸோமா பெரிட்டோனை' (Pseudomyxoma Peritonei) என்ற அரிய நிலை ஏற்படலாம்.

குடல்வால் புற்றுநோய்க்கான சிகிச்சைகள்:

குடல்வால் புற்றுநோய்க்கான சிகிச்சை புற்றுநோயின் வகை மற்றும் அது எந்த நிலையில் உள்ளது என்பதைப் பொறுத்தது.

குடல்வால் புற்றுநோய் மிகவும் அரிதானது. ஆரம்ப நிலையில் தெளிவான அறிகுறிகள் இல்லாமலும் இருக்கலாம். தொடர்ந்து இருக்கும் வயிற்று வலி, வயிறு உப்புசம் அல்லது மலம் கழிப்பதில் மாற்றம் போன்ற அறிகுறிகள் இருந்தால், அவற்றை அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுகுவது நல்லது.

பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன; நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க