மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கிய விபசார விடுதி சுற்றிவளைப்பு
கைது செய்யப்பட்ட ஆண் சந்தேகநபர் 55 வயதுடையவர் என்றும், பெண்கள் 20 மற்றும் 24 வயதுடையவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மசாஜ் நிலையம் என்ற போர்வையில் சட்டவிரோதமாக இயங்கிய விபசார விடுதி ஒன்று, கல்கிஸ்ஸை பகுதியில் நேற்று (13) இரவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சோதனை நடவடிக்கையின் போது, ஆண் சந்தேகநபர் ஒருவரும், இரண்டு பெண் சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டு கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையம் முன் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ஆண் சந்தேகநபர் 55 வயதுடையவர் என்றும், பெண்கள் 20 மற்றும் 24 வயதுடையவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த சந்தேகநபர்கள் வெயாங்கொட, கம்பஹா மற்றும் மடுல்சிம ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக கல்கிஸ்ஸை பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.