மாமியாரை அச்சுறுத்தி பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய மருமகன் கைது!

அநுராதபுரம் திரப்பன பகுதியில் 68 வயதுடைய மாமியாரை அச்சுறுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் இராணுவச் சிப்பாய் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


மாமியாரை அச்சுறுத்தி பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய மருமகன் கைது!

அநுராதபுரம் திரப்பன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், 68 வயதுடைய தனது மாமியாரைக் கொலை செய்வதாக அச்சுறுத்தி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் இராணுவச் சிப்பாய் ஒருவர் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளார். 

பாதிக்கப்பட்ட பெண்ணின் முறைப்பாட்டின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, 37 வயதுடைய குறித்த இராணுவச் சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளதாக திரப்பன பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் மூத்த மகளைத் திருமணம் செய்துள்ள சந்தேகநபர், சம்பவத்தன்று 68 வயதுடைய பெண் தனது அறையில் தூங்கிக்கொண்டிருந்த வேளையில், வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, சத்தமிட்டால் கழுத்தை நெரித்துக் கொன்றுவிடுவதாக மிரட்டி அவரை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்ததாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உயிருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் காரணமாக ஆரம்பத்தில் சம்பவம் குறித்து எவரிடமும் கூற முடியாத நிலையில் இருந்த அப்பெண், பின்னர் திரப்பன பொலிஸ் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டின் பேரில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க