காலி ஹபராதுவ பகுதியில் ஓய்வுபெற்ற ஆசிரியை சகோதரிகள் சடலங்களாக மீட்பு

காலி, ஹபராதுவ கினிகல பகுதியில் ஓய்வுபெற்ற சகோதரிகளான இரு ஆசிரியைகளின் சடலங்கள் காயங்களுடன் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஹபராதுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


காலி ஹபராதுவ பகுதியில் ஓய்வுபெற்ற ஆசிரியை சகோதரிகள் சடலங்களாக மீட்பு

காலி, ஹபராதுவ – கினிகல பகுதியில் உள்ள வீடொன்றின் பின்புறத்திலிருந்து 82 மற்றும் 87 வயதுடைய இரு முதிய பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. உயிரிழந்த இருவரும் ஓய்வுபெற்ற ஆசிரியைகள் என்பதுடன், திருமணமாகாத சகோதரிகள் எனவும் தெரியவந்துள்ளது.

சடலங்களில் காயங்கள் காணப்படுவதால், இவர்கள் வீட்டில் இருந்தபோது கொலை செய்யப்பட்டு, உடல்கள் வீட்டின் பின்புறத்தில் வீசப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

இந்தச் சந்தேகத்திற்கிடமான உயிரிழப்புகளுக்கான பின்னணி மற்றும் காரணம் குறித்து ஹபராதுவ பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க