மயக்கமடைந்த பெண்ணுக்கு உதவி செய்வது போல் நடித்து பாலியல் தொல்லை: தொழிலாளி கைது

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மயக்கமடைந்த பெண்ணுக்கு உதவி செய்வதாகக் கூறி காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த வடமாநிலத் தொழிலாளியை அவிநாசிப்பாளையம் பொலிஸார் கைது செய்தனர்.


மயக்கமடைந்த பெண்ணுக்கு உதவி செய்வது போல் நடித்து பாலியல் தொல்லை: தொழிலாளி கைது

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மயக்கமடைந்த பெண்ணுக்கு உதவி செய்வதாகக் கூறி, காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் வடமாநிலத் தொழிலாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பல்லடம் பகுதியில் வசித்து வரும் வடமாநிலத் தம்பதியருக்கு இடையே நேற்று தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அந்தப் பெண் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அந்த நேரத்தில் அங்கிருந்த ராமகிருஷ்ண மோண்டல் என்ற வடமாநிலத் தொழிலாளி, அப்பெண்ணுக்கு உதவி செய்வதாகக் கூறி தனது இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகத் தெரிவித்துள்ளார்.

எனினும், அவர் மருத்துவமனைக்குச் செல்லாமல் அருகிலிருந்த காட்டுப்பகுதிக்கு அப்பெண்ணை அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. மயக்கம் தெளிந்த பெண் அங்கிருந்து தப்பித்து வீடு திரும்பி, தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து கணவரிடம் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட தம்பதியினர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த அவிநாசிப்பாளையம் பொலிஸார், ராமகிருஷ்ண மோண்டலைக் கைது செய்தனர். அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் தொடர்பாகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க