கள்ளக்காதலியின் 9 வயது மகனை கழுத்தை நெரித்துக் கொன்ற நபர் கைது: சாமியார் வேடமிட்டு தலைமறைவாக இருந்ததாக தகவல்

சென்னையில் கள்ளக்காதலியுடன் ஏற்பட்ட தகராறில் அவரது 9 வயது மகனைக் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, சாமியார் வேடமிட்டுத் தலைமறைவாக இருந்த நபரை தனிப்படைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.


கள்ளக்காதலியின் 9 வயது மகனை கழுத்தை நெரித்துக் கொன்ற நபர் கைது: சாமியார் வேடமிட்டு தலைமறைவாக இருந்ததாக தகவல்

சென்னையில் கள்ளக்காதலியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவரின் ஒன்பது வயது மகனை கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, சாமியார் வேடமிட்டுத் தலைமறைவாக இருந்த நபரை பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கையின் பின்னர் கைது செய்துள்ளனர்.

சென்னை கோயம்பேடு நியூ காலனி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவரைப் பிரிந்து ஒன்பது வயது மகனுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குறித்த பெண்ணுக்கும் தமிழ்ச்செல்வன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனைத் தொடர்ந்து இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் ஒரே வீட்டில் குடும்பமாக வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், இருவருக்கும் இடையே கடுமையான வாய்த்தர்க்கம் மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தமிழ்ச்செல்வன், வீட்டுக்குச் சென்று அங்கிருந்த பெண்ணின் ஒன்பது வயது மகனின் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

இக்கொலைச் சம்பவத்தை அரங்கேற்றிய பின்னர், குறித்த பெண்ணின் கையடக்கத் தொலைபேசிக்குத் தொடர்புகொண்டு சிறுவனைக் கொன்றுவிட்டதாகத் தெரிவித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் வழக்குப் பதிவுசெய்த பொலிஸார், தலைமறைவாகிய தமிழ்ச்செல்வனைக் கைதுசெய்வதற்காக விசேட தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தனர். இந்நிலையில், தொடர் தேடுதலின் பலனாக தலைமறைவாக இருந்த சந்தேகநபரைத் தனிப்படைப் பொலிஸார் அதிரடியாகக் கைது செய்தனர்.

பொலிஸாரின் பிடியிலிருந்து தப்பிப்பதற்காக அவர் தனது தலையை முழுமையாக மொட்டையடித்துக்கொண்டு, சாமியார் வேடமிட்டு பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்துள்ளமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க