குடும்பத் தகராறு: கணவரை உலக்கையால் அடித்துக் கொன்ற மனைவி, 14 வயது மகள் கைது

தெலங்கானா மாநிலம் மஞ்சிரியால் பகுதியில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டுத் துன்புறுத்திய கணவரை, உலக்கையால் அடித்துக் கொன்ற மனைவி மற்றும் அவரது 14 வயது மகளைப் காவல்துறையினர் கைது செய்தனர்.


குடும்பத் தகராறு: கணவரை உலக்கையால் அடித்துக் கொன்ற மனைவி, 14 வயது மகள் கைது

தெலங்கானா மாநிலம் மஞ்சிரியால் மாவட்டம் பிருந்தாவனம் காலனியைச் சேர்ந்த மோகன் என்பவர், அவரது மனைவியால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மோகன் தனது மனைவி ஜமுனா, மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்தார். வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்த மோகன், மனைவி ஜமுனாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவருடன் தொடர்ச்சியாகத் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

கணவரின் சந்தேகப் பேச்சால் மனவேதனை அடைந்த ஜமுனா, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மகளை அழைத்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்குச் சென்றார்.

அந்தப் பிரிவின்போது மோகன் யூடியூப் சேனல் நடத்தி வந்ததோடு, உறவினர் வீட்டிலும் தங்கி வந்துள்ளார். பின்னர் உறவினர்கள் முன்னெடுத்த சமரசப் பேச்சுகளைத் தொடர்ந்து, ஜமுனா மீண்டும் கணவருடன் வாழத் தொடங்கினார்.

இருவரும் சில காலம் அமைதியாக வாழ்ந்து வந்த நிலையில், மோகன் மீண்டும் ஜமுனாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரைத் துன்புறுத்தியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஜமுனா, கணவரைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். மோகன் உறங்கிக் கொண்டிருந்த சமயத்தில், வீட்டிலிருந்த உலக்கையால் அவரது தலையில் ஓங்கி அடித்துக் கொலை செய்துள்ளார்.

கொலையை நிகழ்த்திய பின்னர், தானே நேரடியாகக் காவல் துறைக்குத் தொலைபேசி வாயிலாகத் தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையில், இக்கொலைக்கு ஜமுனாவின் 14 வயது மகளும் உடந்தையாக இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து ஜமுனாவையும் அவரது மகளையும் கைது செய்த காவல்துறையினர், ஜமுனாவை நீதிமன்றக் காவலில் சிறையிலும், சிறுமியைச் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலும் சேர்த்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க