சுக்கிரன் அஸ்தமனம்: அடுத்த 10 நாட்கள் நற்பலன்களைப் பெறவுள்ள 3 ராசிகள்

அக்டோபர் 19 ஆம் திகதி அஸ்தமனமான சுக்கிர பகவானின் அடுத்த 10 நாட்கள் பயணத்தால் மேஷம், மிதுனம் மற்றும் கடக ராசியினர் பெறவுள்ள நற்பலன்கள்.


சுக்கிரன் அஸ்தமனம்: அடுத்த 10 நாட்கள் நற்பலன்களைப் பெறவுள்ள 3 ராசிகள்

நவகிரகங்களில் காதல், அழகு, ஆடம்பரம் மற்றும் சொகுசு வாழ்க்கைக்கு காரணியாக விளங்கும் சுக்கிர பகவான் அக்டோபர் 19 ஆம் திகதி அஸ்தமனமாகியுள்ளார். பலவீனமான நிலையில் அடுத்த 10 நாட்களுக்கு சுக்கிரன் பயணிக்கவுள்ள நிலையில், இந்த காலகட்டத்தில் மூன்று குறிப்பிட்ட ராசிகள் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளன.

மேஷ ராசி

மேஷ ராசியினருக்கு இக்காலகட்டத்தில் குடும்ப வாழ்க்கையில் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, வாழ்க்கைத் துணையுடனான உறவு பலப்படும். வருமானம் அதிகரிப்பதுடன் நிதி நிலைமை சீராகும். உடல்நலப் பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் கிடைப்பதுடன், விரும்பிய பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்புகளும் அமையும்.

மிதுன ராசி

மிதுன ராசிக்காரர்களுக்கு ஆடம்பரமான வாழ்க்கை முறைக்கான சூழல் உருவாகும். தொழிலில் முன்னேற்றமும் புதிய வருமான வழிகளும் தென்படும் நிலையில், கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தினால் சிறந்த வளர்ச்சியை எட்ட முடியும். மாணவர்கள் கல்வியில் திறமையை வெளிப்படுத்துவர், அதேவேளை காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளும் கைகூடும்.

கடக ராசி

கடக ராசியினருக்கு நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. பணியிடத்திலும் குடும்பத்திலும் இவர்களின் கருத்துகளுக்கு மதிப்பு கூடும் என்பதுடன் தலைமைத்துவத் திறன்களும் வெளிப்படும். தொழிலில் திட்டமிட்ட புதிய முயற்சிகள் வெற்றியடைவதுடன், பணியாளர்கள் தங்களது கடின உழைப்புக்குரிய உரிய பலன்களைப் பெற்று பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்வார்கள்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க