நிலத்தகராறில் அண்ணனைக் கொன்ற தம்பி ஐந்து ஆண்டுகளுக்குப் பின் கைது

மீட்டியாகொட பகுதியில் நிலத்தகராறு காரணமாக மூத்த சகோதரரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் 49 வயதுடைய தம்பியை ஐந்து ஆண்டுகளுக்குப் பின் பொலிஸார் கைது செய்துள்ளனர்.


நிலத்தகராறில் அண்ணனைக் கொன்ற தம்பி ஐந்து ஆண்டுகளுக்குப் பின் கைது

மீட்டியாகொட பகுதியில் நிலத்தகராறு காரணமாக மூத்த சகோதரரைக் கொலை செய்த குற்றச்சாட்டில், உயிரிழந்தவரின் 49 வயதான தம்பியை ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2 ஆம் திகதி தனது தந்தையைக் காணவில்லை என்று அவரது மகள் மீட்டியாகொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். முறைப்பாடு அளிக்கப்பட்ட சில நாட்களில், காணாமல் போனவரின் சடலம் அருகிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து மீட்கப்பட்டது.

இது குறித்து முன்னெடுக்கப்பட்டு வந்த விசாரணைகள், பொலிஸாருக்குக் கிடைத்த புதிய தகவலின் அடிப்படையில் தீவிரப்படுத்தப்பட்டன. நீண்ட தொடர் விசாரணைகளின் பலனாக ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது நடவடிக்கையின் போது, இந்தக் கொலைச் சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இரும்புக் கம்பி ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பலபிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க