திருகோணமலையில் விடுதி உரிமையாளர் கொலை வெளியான தகவல்
திருகோணமலை சிங்ஹபுர பகுதியில் விடுதி உரிமையாளரான 56 வயதுடைய நபர் கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணை.
திருகோணமலை, சிங்ஹபுர நான்காம் கட்டை பகுதியில் விடுதி உரிமையாளர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு 8.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் சிங்கபுர பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய நபராவார். குறித்த நபர் தனது விடுதியில் தனியாக இருந்த வேளையில், அங்கு வந்த அடையாளம் தெரியாத நபரோ அல்லது குழுவினரோ இந்தத் தாக்குதலை நடத்தி கொலையைச் செய்திருக்கலாம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் திருகோணமலை காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.