சுன்னாகத்தில் ஹெரோயினுடன் குடும்பப் பெண் கைது
யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் 1.800 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 29 வயதுடைய குடும்பப் பெண் ஒருவரைப் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம், சுன்னாகம் தெற்கு கல்லாக்காட்டுவான் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் குடும்பப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இரவு வேளையில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது இவர் பிடிபட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட 29 வயதுடைய பெண்ணிடமிருந்து 1.800 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, சந்தேகநபரான பெண் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகச் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வரும் சுன்னாகம் பொலிஸார், அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.