ஒரு தடவைக்கு ஒரு இலட்சம்... நடிகை கிரணின் அறிவிப்பால் இணையத்தில் சர்ச்சை!

நடிகை கிரண் ரத்தோட் சாட்டிங் மற்றும் வீடியோ கால் வசதிகளுக்காக ரூ.99,999 கட்டணத்தில் புதிய விவிஐபி மெம்பர்ஷிப் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளமை இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


ஒரு தடவைக்கு ஒரு இலட்சம்... நடிகை கிரணின் அறிவிப்பால் இணையத்தில் சர்ச்சை!

தமிழ் சினிமாவில் 'ஜெமினி', 'அன்பே சிவம்', 'வின்னர்' உள்ளிட்ட வெற்றித் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை கிரண் ரத்தோட். தற்போது திரைப்படங்களில் பெரியளவில் வாய்ப்புகள் இல்லாத நிலையில், சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பதிவேற்றி ரசிகர்களிடையே தொடர்ச்சியாகக் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

இந்த நிலையில், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புதிய விளம்பர போஸ்டர் ஒன்று இணையத்தில் கடுமையான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் 'கிரண் ரத்தோடின் பிரைவேட் வேர்ல்ட்' என்ற பெயரில் விவிஐபி மெம்பர்ஷிப் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள அவர், இதற்கான கட்டணமாக ரூ.99,999 என நிர்ணயித்துள்ளார்.

கடற்கரையில் உள்ள தனது புகைப்படத்துடன் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பில், இந்த மெம்பர்ஷிப்பைப் பெறுபவர்களுக்கு பல்வேறு பிரத்யேக சலுகைகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கட்டுப்பாடற்ற சாட்டிங் வசதி, நேரடியாக வீடியோ காலில் உரையாடும் வாய்ப்பு, விஐபி உறுப்பினர்களுக்கான பிரத்யேக தனிக்குழுவில் இணையும் வசதி, இதுவரை வெளியிடப்படாத சிறப்பு புகைப்படங்கள் மற்றும் காணொளிகள், தனிப்பட்ட முறையில் தொடர்பில் இருக்கும் வாய்ப்பு உள்ளிட்டவை இதில் அடங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இது உண்மையான ரசிகர்களுக்காக ஒதுக்கப்பட்ட பிரத்யேக அனுபவம் என்றும் பொய் வாக்குறுதி அல்ல என்றும் குறிப்பிட்டு, இணைப்பிற்கான லிங்க்கையும் அவர் பகிர்ந்துள்ளார். இருப்பினும், வீடியோ கால் மற்றும் சாட்டிங்கிற்கு சுமார் ஒரு இலட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கும் இந்த முயற்சிக்கு இணையவாசிகள் பலரும் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க