சிறையில் நடந்த சோகம்: மரண தண்டனைக்கு முன் திருமணம் செய்த காதலர்கள்!

ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த காதலியுடன் தொலைபேசி வழியாக திருமணம் செய்துகொண்ட இளைஞர் உடனடியாக தூக்கிலிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சிறையில் நடந்த சோகம்: மரண தண்டனைக்கு முன் திருமணம் செய்த காதலர்கள்!

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக, சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரது காதலியுடன் தொலைபேசி மூலம் திருமணம் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் உணர்ச்சிப் பெருக்கையும் ஏற்படுத்தியுள்ளது.

ஒருவரையொருவர் மீண்டும் சந்திக்கவே முடியாது என்பதை நன்கு உணர்ந்திருந்த அந்தக் காதலர்கள், சிறைச்சாலை தொலைபேசி வழியாக திருமண உறுதிமொழிகளை எடுத்துக்கொண்டு முறைப்படி திருமணம் செய்துகொண்டனர்.

திருமணம் முடிந்த உடனேயே, அந்த இளைஞர் நேரடியாக மரண தண்டனை நிறைவேற்றும் இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.

இருபத்தைந்து வயதுடைய அலிரேஜா செபாஹி மற்றும் இருபத்திரண்டு வயதுடைய மஹ்சத் கேஷானி ஆகிய இருவரும் காதலர்கள். அரசுக்கு எதிரான போராட்டத்தின் போது 2026ஆம் ஆண்டு தொடக்கத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதில் செபாஹிக்கு மரண தண்டனையும், கேஷானிக்கு ஐந்து ஆண்டுகள் கடுங்காவலும் விதிக்கப்பட்டிருந்தது.

செபாஹிக்கு விரைவில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்ற அச்சத்தில், கேஷானி சிறையிலேயே திருமணம் செய்ய அனுமதி கோரியிருந்தார். அதிகாரிகள் அனுமதி அளித்ததன் அடிப்படையில், ஞாயிற்றுக்கிழமை இருவரது தந்தையரும் உடன் இருக்க, சிறைச்சாலையில் உள்ள தொலைபேசி வாயிலாக இருவரும் திருமண உறுதிமொழி ஏற்று மணமுடித்துக்கொண்டனர்.

மனித உரிமைகள் வழக்குரைஞர் ஒருவர் இந்தத் திருமணத்திற்கு உதவி செய்திருந்தார். கேஷானியின் வீட்டிலிருந்து குரான், சில இனிப்புகள் மற்றும் ஒரு சிவப்பு ரோஜா ஆகியவை மட்டுமே பாரம்பரிய வரதட்சணையாக கொடுக்கப்பட்டன. இந்தத் திருமணத்தின் போது அங்கிருந்த சில சிறை ஊழியர்களும் கண்ணீர் விட்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த பலரும், இத்தகைய துணிச்சலான முடிவை எடுக்க கேஷானிக்கு எவ்வாறு தைரியம் பிறந்தது என்று கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார்கள். செபாஹி திங்கள்கிழமை அதிகாலை, அவருடன் போராடியவர்களுடன் சேர்த்து தூக்கிலிடப்பட்டுள்ளார்.

ஏற்கனவே மரண தண்டனை நிறைவேற்ற நாள் குறிக்கப்பட்ட நிலையில், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு கோமா நிலையில் இருந்தவர் மீண்டெழுந்த நிலையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க