திருமணம் எப்போது? மனந்திறந்து சொன்ன நடிகை அஞ்சலி!

திருமணம் குறித்து நேர்காணல் ஒன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு நடிகை அஞ்சலி தனது பாணியில் நகைச்சுவையாகவும் வெளிப்படையாகவும் பதிலளித்துள்ளார்.


திருமணம் எப்போது? மனந்திறந்து சொன்ன நடிகை அஞ்சலி!

இயக்குநர் ராம் இயக்கத்தில் வெளியான ‘கற்றது தமிழ்’ திரைப்படத்தில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களைப் பெற்ற அவர், தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி இடத்தைப் பிடித்தார்.

ஒரு சிறிய இடைவெளிக்குப் பின்னர் தமிழ் திரையுலகில் மீண்டும் தீவிரமாக இயங்கி வரும் அஞ்சலி, விஷாலுடன் இணைந்து ‘மகுடம்’ மற்றும் இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழு மலை’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். திரைப்படங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் அவரிடம் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அஞ்சலி, தனது திருமணம் எப்போது நடக்க வேண்டும் என்பதைத் தானே தீர்மானிப்பேன் என்றும், இதில் மற்றவர்களுக்கு ஏன் இவ்வளவு அக்கறை என்று புரியவில்லை என்றும் நகைச்சுவையாகக் கூறினார். மேலும், திருமணம் என்பது வெறும் ஒரு நாள் கொண்டாட்டம் மட்டுமல்ல என்றும் அவர் தனது பாணியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க