பிணவறையில் பெண்ணின் சடலத்தை பாலியல் வன்கொடுமை செய்த நபர் – சிசிடிவி காட்சி வைரலான பின் கைது

Published on: 17 Dec 2025, 04:12 am

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

அரசு மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த பெண்ணின் சடலத்தை 25 வயது நீலேஷ் பில்லாலா என்பவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் சிசிடிவி காட்சிகள் மூலம் வெளிப்பட்டுள்ளது.

பிணவறையில் பெண்ணின் சடலத்தை பாலியல் வன்கொடுமை செய்த நபர் – சிசிடிவி காட்சி வைரலான பின் கைது

மத்தியப் பிரதேசத்தின் புர்ஹான்பூர் மாவட்டத்தில் உள்ள கக்னர் சமூக சுகாதார நிலையத்தின் பிரேதப் பரிசோதனை அறையில், ஏப்ரல் 18, 2024 அன்று நடந்த பயங்கரமான ஒரு சம்பவம் அண்மையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அரசு மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த பெண்ணின் சடலத்தை 25 வயது நீலேஷ் பில்லாலா என்பவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் சிசிடிவி காட்சிகள் மூலம் வெளிப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகியிருந்தாலும், அக்டோபர் மாதத்தில் மருத்துவமனை ஊழியர்கள் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்யும் போது இந்த கொடூரமான செயல் தெரிய வந்தது.

காட்சிகளில், பில்லாலா நள்ளிரவில் பிரேதப் பரிசோதனை மையத்திற்குள் நுழைந்து, சடலத்தை ஸ்ட்ரெச்சரிலிருந்து இழுத்து, கேமராவுக்கு தெரியாத மூலைக்கு இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெளிவாக பதிவாகியிருந்தது. அதன் பிறகு அவர் சடலத்தை மீண்டும் ஸ்ட்ரெச்சருக்கு அருகில் வைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதையடுத்து, மருத்துவ அதிகாரி டாக்டர் ஆதியா தாவர் அக்டோபர் 7 ஆம் தேதி போலீசில் புகார் அளித்தார்.

அதன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீலேஷ் பில்லாலா கைது செய்யப்பட்டார். தற்போது அவர் நீதிமன்ற காவலில் உள்ளார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW