திருமணத்துக்கு தடையாக இருந்த கள்ளக்காதலியைக் கொன்ற இளைஞர்... வெளியான தகவல்!

இந்தியாவின் கர்நாடக மாநிலம், பெலகாவி மாவட்டத்தில் திருமண விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட முரண்பாட்டினால் 38 வயதுடைய பெண்ணைப் படுகொலை செய்த குற்றச்சாட்டில் 28 வயதுடைய இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வனப்பகுதியிலிருந்து பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.


திருமணத்துக்கு தடையாக இருந்த கள்ளக்காதலியைக் கொன்ற இளைஞர்... வெளியான தகவல்!

இந்தியாவின் கர்நாடக மாநிலம், பெலகாவி மாவட்டத்தில் திருமண விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட முரண்பாட்டினால் பெண்ணொருவரைப் படுகொலை செய்ததாகக் கூறப்படும் இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெலகாவி மாவட்டத்தின் சிக்கோடி தாலுகாவுக்கு உட்பட்ட நானடி கிராமத்தைச் சேர்ந்த 38 வயதுடைய ஐராவதி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தனது கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்த ஐராவதி, சிக்கோடி பகுதியிலுள்ள பல்பொருள் அங்காடியொன்றில் பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், பாகல்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயதுடைய சஞ்சய் என்ற இளைஞருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவருக்கும் இடையில் காதல் உறவு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கிடையில், சஞ்சய்க்குத் திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளை அவரது பெற்றோர் மேற்கொண்டுள்ளனர்.

எனினும், குறித்த திருமண ஏற்பாடுகளுக்கு ஐராவதி எதிர்ப்புத் தெரிவித்ததாகவும், ஏற்கனவே இரண்டு சந்தர்ப்பங்களில் சஞ்சய்க்கு நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் தடைப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில், மூன்றாவது முறையாக மற்றுமொரு பெண்ணுடன் சஞ்சய்க்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

இதற்கும் ஐராவதி எதிர்ப்புத் தெரிவித்ததாகக் கூறப்படும் நிலையில், அவரைக் கொலை செய்வதற்கு சஞ்சய் திட்டமிட்டதாகப் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த 20ஆம் திகதி ஐராவதியை தோரணகல்லு பகுதியிலுள்ள மலைக்கோவிலொன்றுக்கு சஞ்சய் அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, பீர் போத்தல் மற்றும் கற்களால் ஐராவதியை சஞ்சய் தாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

தாக்குதலில் பலத்த காயமடைந்த ஐராவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், அவரது சடலத்தை அருகிலுள்ள வனப்பகுதியில் வீசிவிட்டு சந்தேகநபர் தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கிடையில், வேலைக்குச் சென்ற ஐராவதி வீடு திரும்பாததால் கவலையடைந்த அவரது குடும்பத்தினர் சிக்கோடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், ஐராவதியின் கையடக்கத் தொலைபேசி சமிக்ஞைகளை ஆய்வு செய்துள்ளனர்.

இதன்போது, அவர் இறுதியாகச் சஞ்சயுடன் இருந்தமை தெரியவந்ததைத் தொடர்ந்து, குறித்த இளைஞரைப் பொலிஸார் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

திருமண விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட முரண்பாட்டினால் ஐராவதியைக் கொலை செய்து அவரது சடலத்தை வனப்பகுதியில் வீசியதாகச் சந்தேகநபர் விசாரணையின்போது ஒப்புக்கொண்டுள்ளதாகப் பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து, வனப்பகுதியிலிருந்து ஐராவதியின் சடலத்தை மீட்ட பொலிஸார், பிரேத பரிசோதனைக்காக பெலகாவி அரச வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க