14 வயது சிறுவனுடன் பெண்ணின் தகாத உறவை அம்பலப்படுத்தப் போவதாகக் கூறிய மாணவன்  கொலை; பெண் உட்பட இருவர் கைது

தெலுங்கானாவில் தங்களது ரகசிய உறவை வெளிப்படுத்தப் போவதாகக் கூறிய 10ஆம் வகுப்பு பள்ளி மாணவனை நஞ்சு கொடுத்துக் கொலை செய்த குற்றச்சாட்டில் 19 வயதுப் பெண் மற்றும் 14 வயது


14 வயது சிறுவனுடன் பெண்ணின் தகாத உறவை அம்பலப்படுத்தப் போவதாகக் கூறிய மாணவன்  கொலை; பெண் உட்பட இருவர் கைது

தங்களது தகாத உறவைக் குடும்பத்தினரிடம் வெளிப்படுத்தப் போவதாக அச்சுறுத்திய 10ஆம் வகுப்பு பள்ளி மாணவனுக்கு நஞ்சு கலந்த குளிர்பானத்தைக் கொடுத்துக் கொலை செய்த குற்றச்சாட்டில், 19 வயதுடைய பெண் மற்றும் 14 வயதுச் சிறுவன் ஆகியோரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் இடம்பெற்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தின் கம்மம் (Khammam) மாவட்டம், கல்லூர் (Kalloor) பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய குறித்த பெண், தனது கணவரைப் பிரிந்து கடந்த ஆறு மாதங்களாகத் தனது பாட்டியின் வீட்டில் வசித்து வந்துள்ளார். இக்காலப்பகுதியில், அதே பகுதியைச் சேர்ந்த 14 வயதுச் சிறுவனுடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இப்பழக்கம் தகாத உறவாக மாறியதை அடுத்து, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த பெண்ணும் 14 வயதுச் சிறுவனும் தவறான முறையில் இருந்ததை ரவி என்ற 15 வயதுடைய 10ஆம் வகுப்பு மாணவன் நேரில் கண்டுள்ளார். அத்துடன், இவ்விடயம் குறித்து இருவரது குடும்பத்தினரிடமும் தெரிவிக்கப் போவதாக அந்த மாணவன் எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் தங்களது இரகசியத் தொடர்பு வெளியாகிவிடும் என்று அஞ்சிய இருவரும், அந்த மாணவனைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

இதற்கமைய, திட்டமிட்டபடி அந்த மாணவனை மக்கள் நடமாட்டம் இல்லாத தனிமையான பகுதியொன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவனுக்குக் களைக்கொல்லி நஞ்சு கலந்த குளிர்பானத்தைக் கொடுத்துக் கொலை செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாகக் கிடைக்கப்பெற்ற புகாரைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த பொலிஸார், தீவிர விசாரணைகளை முன்னெடுத்துக் குற்றவாளிகளான 19 வயதுப் பெண்ணையும் 14 வயதுச் சிறுவனையும் கைது செய்துள்ளனர்.

ரகசிய உறவு அம்பலமாகிவிடும் என்ற அச்சத்தில், 15 வயதுடைய பள்ளி மாணவன் ஒருவனுக்கு நஞ்சு கொடுத்துக் கொடூரமான முறையில் கொலை செய்த இச்சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், பொலிஸார் இக்கொலை குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க