செம்மணி புதைகுழியில் விரல் எலும்புடன் மோதிரம் மீட்பு

Published on: 18 Jul 2026, 08:01 am

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

சேதமடைந்த மோதிரம் ஒன்றும், விரல் எலும்புடன் காணப்பட்ட செப்பிலான மோதிரம் ஒன்றும், குவியலாக அமைந்திருந்த இரண்டு தொகுதி எலும்புக்கூடுகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி புதைகுழியில் விரல் எலும்புடன் மோதிரம் மீட்பு

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 35ஆவது நாள் நடவடிக்கைகளில், விரல் எலும்புடன் இணைந்த செப்பிலான மோதிரம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இன்றைய அகழ்வுப் பணிகளின் போது புதிதாக 11 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 7 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

மேலும், சேதமடைந்த மோதிரம் ஒன்றும், விரல் எலும்புடன் காணப்பட்ட செப்பிலான மோதிரம் ஒன்றும், குவியலாக அமைந்திருந்த இரண்டு தொகுதி எலும்புக்கூடுகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி புதைகுழியில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களாக இதுவரை 89 நாட்கள் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றுள்ளன. இதில் மொத்தம் 431 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 423 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW