யாழ்ப்பாணத்தில் இரு பிள்ளைகளின் தந்தையுடன் 18 வயது மாணவி தலைமறைவு

யாழ்ப்பாணத்தில் பிரபல பாடசாலை மாணவி இரு பிள்ளைகளின் தந்தையுடன் தலைமறைவான சம்பவத்தால் குடும்பங்களிடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


யாழ்ப்பாணத்தில் இரு பிள்ளைகளின் தந்தையுடன் 18 வயது மாணவி தலைமறைவு

யாழ்ப்பாணத்தில் 18 வயது மாணவி, இரண்டு பிள்ளைகளின் தந்தையான 36 வயது நபருடன் தலைமறைவாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் இரு குடும்பங்களிடையே முறுகல் நிலையையும் ஏற்படுத்தியுள்ளது. குறித்த மாணவி யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல பெண்கள் பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வருபவர் எனத் தெரியவந்துள்ளது.

மாணவியுடன் சென்றதாகக் கூறப்படும் நபர் ஏற்கனவே திருமணமானவர் என்பதுடன், இரு பிள்ளைகளுக்குத் தந்தையாவார். இவர் மாணவியுடன் தொலைபேசி வழியே தொடர்ந்து தொடர்பில் இருந்ததை அவரது மனைவி அறிந்து கணவரைக் கண்டித்ததாகவும், அந்தப் பழக்கத்தை உடனடியாகக் கைவிடுமாறு எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.

எனினும், அந்த எச்சரிக்கையையும் மீறி அவர்கள் இருவரும் தொடர்பில் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், மாணவி அந்த நபருடன் வீட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளார்.

மாணவி காணாமல் போனதைத் தொடர்ந்து ஏற்பட்ட தகராறில், அவரது தாயாரும் உறவினர்களும் மாணவியின் தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுத் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. அதேவேளை, மாணவியுடன் சென்ற நபரின் மனைவியைத் தாக்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகப் பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. மாணவி தற்போது எங்கு உள்ளார் என்பது குறித்தும், இச்சம்பவத்தின் உண்மைப் பின்னணி குறித்தும் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க