யுவதியுடன் தவறான உறவு; பச்சிளம் குழந்தையின் சடலம் மீட்பு: இரு பிள்ளைகளின் தந்தை கைது

அலவத்துகொடவில் பச்சிளம் குழந்தையொன்றை இரகசியமாகப் புதைத்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் 30 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவின் பேரில் குழந்தையின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.


யுவதியுடன் தவறான உறவு; பச்சிளம் குழந்தையின் சடலம் மீட்பு: இரு பிள்ளைகளின் தந்தை கைது

அலவத்துகொட பகுதியில் பச்சிளம் குழந்தையொன்றை இரகசியமாகப் புதைத்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் 30 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையொருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவைப் பேணி வந்ததாகக் கூறப்படும் 21 வயதுடைய பெண்ணுக்குப் பிறந்த குழந்தையே இவ்வாறு புதைக்கப்பட்டுள்ளதாக அலவத்துகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணிடமும் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான அறிக்கையைப் பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் புதைக்கப்பட்டிருந்த குழந்தையின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட சடலம் பிரேதப் பரிசோதனைக்காக கண்டி சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குழந்தையின் மரணத்திற்கான காரணம் தொடர்பில் இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகவில்லை.

அலவத்துகொட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் தலைமையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க