அதிரடியாகக் குறைந்த தங்கம் விலை: இன்றைய விலை நிலவரம்

Published on: 05 Sep 2026, 01:08 pm

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1,360 குறைந்துள்ள நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.

அதிரடியாகக் குறைந்த தங்கம் விலை: இன்றைய விலை நிலவரம்

சென்னையில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்தைக் கண்டுவந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கணிசமாகக் குறைந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்ச்சியாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள இந்த வீழ்ச்சி நுகர்வோர் மத்தியில் கவனத்தைப் பெற்றுள்ளது.

முன்னதாக, நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.2,320 மற்றும் கிராமுக்கு ரூ.290 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,13,920-க்கும், ஒரு கிராம் ரூ.14,240-க்கும் விற்பனையானது. அதனைத் தொடர்ந்து நேற்றும் தங்கம் விலை மேலும் அதிகரித்து, சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,14,880-க்கும், கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,360-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,360 குறைந்து ஒரு சவரன் ரூ.1,13,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் கிராமுக்கு ரூ.170 குறைந்து ஒரு கிராம் ரூ.14,190-க்கு விற்பனையாகிறது.

இதனிடையே, வெள்ளி விலையில் இன்று எவ்வித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,55,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW