நகை பிரியர்களுக்கு சிறந்த வாய்ப்பு: தங்கம் விலை மீண்டும் சரிவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (12) சவரனுக்கு ரூ.1,600 குறைந்து ரூ.1,02,520 ஆக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.


நகை பிரியர்களுக்கு சிறந்த வாய்ப்பு: தங்கம் விலை மீண்டும் சரிவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை (12) மீண்டும் சரிவைச் சந்தித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.200 குறைந்து ரூ.12,815 ஆகவும், சவரனுக்கு ரூ.1,600 குறைந்து ஒரு சவரன் ரூ.1,02,520 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த மாதத் தொடக்கத்திலிருந்தே தங்கத்தின் விலையில் தொடர்ச்சியான ஏற்ற இறக்கங்கள் பதிவாகி வருகின்றன.

முன்னதாக, செவ்வாய்க்கிழமை (10) சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.13,210 ஆகவும், ஒரு சவரன் ரூ.1,05,680 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து புதன்கிழமை (11) தங்கம் விலை கிராமுக்கு ரூ.195 குறைந்து ரூ.13,015 ஆகவும், சவரனுக்கு ரூ.1,560 குறைந்து ரூ.1,04,120 ஆகவும் பதிவாகியிருந்தது.

தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக இன்றும் விலை குறைந்துள்ளதால் நகை வாங்குவோர் மத்தியில் ஆறுதல் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, வெள்ளி விலையில் இன்று எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. நேற்றைய தினம் கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.200 ஆகவும், கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து ஒரு கிலோ ரூ.2 இலட்சமாகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்றும் அதே விலையிலேயே வெள்ளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க