தங்கத்தில் கலப்படம் செய்யப்படும் சீனப் பொருள்; தங்கத்தின் விலை வீழ்ச்சி தொடர்பில வெளியான தகவல்!

தங்கத்தின் விலை சரிவடைந்துள்ள நிலையில், சீனாவின் 'ரீனியம்' இரசாயனப் பொருளைத் தங்கத்தில் கலப்பதாக எழுந்துள்ள புகார்களை அடுத்து இந்திய தர நிர்ணய ஆணையம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.


தங்கத்தில் கலப்படம் செய்யப்படும் சீனப் பொருள்; தங்கத்தின் விலை வீழ்ச்சி தொடர்பில வெளியான தகவல்!

தங்கத்தில் கலப்படம் செய்யப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ள நிலையில், தங்கம் கொள்வனவு செய்வோர் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு துறைசார் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சீனாவிலிருந்து கொண்டுவரப்படும் 'ரீனியம்' (Rhenium) எனும் இரசாயனப் பொருளைத் தங்கத்துடன் கலப்பதாகத் தகவல்கள் பரவி வருகின்றன.

இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் ஒரு பவுன் தங்கத்தின் விலை ஒரு இலட்சம் ரூபாவைத் தொட்டதுடன், அதனைத் தொடர்ந்து ஒரு இலட்சத்து 15 ஆயிரம் ரூபா வரை உயர்வடைந்தது. எவ்வாறாயினும், கடந்த 10 நாட்களாகத் தங்கத்தின் விலை படிப்படியாகக் குறைந்து தற்போது சுமார் 90 ஆயிரம் ரூபாவாகப் பதிவாகியுள்ளது. எதிர்வரும் நாட்களில் ஒரு பவுன் தங்கத்தின் விலை 75 ஆயிரம் ரூபா வரை குறையக்கூடும் எனச் சில தரப்பினர் கருத்து வெளியிட்ட போதிலும், அது சாத்தியமாகுமா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

தங்கத்தின் விலை பவுனுக்கு 90 ஆயிரம் ரூபா வரை குறைந்துள்ளமையால், பொதுமக்களிடையே தங்கம் வாங்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதனைப் பயன்படுத்திப் பலரும் தங்கத்தில் கலப்படம் செய்வதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குறிப்பாக, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ரீனியம் எனும் உலோகப் பொடியைத் தங்கத்துடன் கலப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், தங்கத்தில் எவ்விதமான கலப்படமும் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய தர நிர்ணய ஆணையம் (BIS) எச்சரிக்கை விடுத்துள்ளது. தங்கத்தில் கலப்படம் செய்வதற்கான பொருட்களைத் தயாரிப்பவர்கள், விநியோகிப்பவர்கள் அல்லது பயன்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவ்வாணையம் தெரிவித்துள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க