இரவு நேரங்களில் பெண்களை பணியில் அமர்த்த அனுமதி: புதிய வர்த்தமானி அறிவிப்பு வெளியீடு

இரவு நேரங்களில் பெண்களை சுகாதாரப் பணியாளர்களாகவும், உணவு சேவை உதவியாளர்களாகவும் பணியமர்த்த அனுமதி வழங்கும் புதிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தலை தொழிலாளர் அமைச்சர் டாக்டர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ வெளியிட்டுள்ளார். இதன் மூலம், கடை மற்றும் அலுவலக ஊழியர்கள் (வேலைவாய்ப்பு மற்றும் ஊதிய ஒழுங்குமுறை) சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக நடைமுறையில் இருந்த சட்டத்தின்படி, 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களை மாலை 6.00 மணிக்கு பின்னர் ‘பெண்கள் கழிப்பறை உதவியாளர்கள்’ என்ற வரம்பிற்குள் மட்டுமே பணியமர்த்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

ஆனால், புதிய வர்த்தமானி அறிவிப்பின் அடிப்படையில், 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தற்போது மாலை 6.00 மணிக்கு பின்னரும், மறுநாள் காலை 6.00 மணிக்கு முன்னரும் துப்புரவுப் பணியாளர்களாகவோ அல்லது உணவு சேவை உதவியாளர்களாகவோ பணியமர்த்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த நேரங்களில் பெண்களை பணியில் அமர்த்தும் நிறுவனங்கள் மற்றும் முதலாளிகள், அவர்களுக்கு பொருத்தமான தங்குமிட வசதிகள், பாதுகாப்பான போக்குவரத்து, தேவையான சுகாதார வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் ஒட்டுமொத்த நலனையும் உறுதி செய்வது கட்டாயம் என அந்த வர்த்தமானி அறிவிப்பில் தெளிவாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர