"இங்க குடும்பமே அழியபோகுது.. உங்களுக்கு டூர் கேட்குதா?" – எதிர்நீச்சல் நந்தினியை வம்பிழுக்கும் ரசிகர்கள்!

Published on: 28 Aug 2026, 03:33 pm

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

சன் டிவி 'எதிர்நீச்சல் தொடர்கிறது' சீரியலில் குடும்பத்தை அழிக்க ராவணன் களமிறங்கியுள்ள பரபரப்பான கட்டத்தில், நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஹரிப்பிரியா வெளிநாட்டு டூர் சென்று இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார்.

"இங்க குடும்பமே அழியபோகுது.. உங்களுக்கு டூர் கேட்குதா?" – எதிர்நீச்சல் நந்தினியை வம்பிழுக்கும் ரசிகர்கள்!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் 'எதிர்நீச்சல் தொடர்கிறது' தற்போது மிகவும் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. குணசேகரனை அடுத்து, ஒட்டுமொத்த குடும்பத்தையும் அழிக்கும் நோக்கத்துடன் ராவணன் களமிறங்கியுள்ளார். இந்த அச்சுறுத்தலான நிலையில், குடும்பத்தைக் காக்க ஜனனியும் சக்தியும் போராடி வருகின்றனர். குணசேகரன் அய்யனார் கோவிலில் விரதம் இருந்து பூஜைகள் செய்து வருகிறார்.

இந்தப் பதற்றமான சூழலில், சீரியலில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ஹரிப்பிரியா, தனது ஜாலியான டூர் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். மாடர்ன் லுக்கில் போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகின்றன.

இதனைப் பார்த்த ரசிகர்கள் சிலர், "இங்கே குடும்பமே அழியப் போகிறது. உங்களுக்கு டூர் கேட்குதா?" என்று கேட்டு ஹரிப்பிரியாவை செல்லமாக கிண்டல் செய்யத் தொடங்கியுள்ளனர். மேலும், "குடும்பம் அழியும் நிலையில் நீங்கள் டூரா?" என பலவிதமான கமெண்ட்களும் வைரலாகி வருகின்றன.

நடிகை ஹரிப்பிரியாவின் இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. சீரியலில் அவர் ஏற்று நடித்துள்ள நந்தினி கதாபாத்திரத்திற்கும், நிஜ வாழ்க்கையில் அவர் மேற்கொண்டுள்ள மகிழ்ச்சியான டூருக்கும் இடையேயான முரண்பாடே இந்த கிண்டல்களுக்கு முக்கிய காரணமாகும்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW