கொழும்பு பிரபல பாடசாலையில் மாணவனுடன் ஆசிரியைகளின் உல்லாச வீடியோவால் சர்ச்சை
கொழும்பில் அமைந்துள்ள ஒரு பிரபலமான பாடசாலையின் மாணவத் தலைவர் மற்றும் அங்கு பணியாற்றும் மூன்று பெண் ஆசிரியர்களுக்கிடையிலான நெருங்கிய தொடர்புகளைப் பற்றியதாக சமூக ஊடகங்களில் பரவும் வீடியோ காட்சிகள் குறித்து, பாடசாலையின் அதிபர் விரிவான அறிக்கையொன்றை சமர்ப்பிக்க வேண்டும் என கல்வியமைச்சின் செயலாளர் நாலக்க கலுவெவ உத்தரவிட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் பரவும் இந்த வீடியோக்களை கல்வி அமைச்சு மிகுந்த கவனத்துடன் கண்காணித்து வருவதாகவும், அதிபர் சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் சம்பவம் தொடர்பான விசாரணை தொடங்கப்படும் என்றும் செயலாளர் தெரிவித்தார். விசாரணை முடிவுகளின் பேரில் தேவையான கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
அறிக்கை கிடைக்கும் வரை சம்பந்தப்பட்ட பெண் ஆசிரியர்களை இடைநீக்கம் செய்வதற்கோ அல்லது பிற ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கோ முடியாது என்றும் அவர் விளக்கினார்.
சமூக ஊடகங்களில் பரவும் வீடியோக்களில், அந்தப் பாடசாலையின் தலைமை மாணவர் எனக் கூறப்படும் ஒருவரும், சில ஆசிரியர்களும் தொடர்புடையதாகக் காட்டப்படும் அநாகரிகமான காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விவகாரம் தற்போது பொதுமக்கள் மத்தியில் பரவலான சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
