2.5 கோடி ரூபாய்க்கு அபூர்வ ’ராவண கல்’ விற்க முயன்ற இருவர் கைது

Published on: 25 Jul 2026, 12:35 pm

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

கிண்ணியா மற்றும் மூதூர் பகுதிகளைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2.5 கோடி ரூபாய்க்கு அபூர்வ ’ராவண கல்’ விற்க முயன்ற இருவர் கைது

திருகோணமலை, கிண்ணியா பகுதியில் இரண்டரை கோடி ரூபாய் பெறுமதியான அபூர்வ சுலைமான் கல் எனக் கூறப்படும் ‘ராவண கல்’ ஒன்றை  விற்பனை செய்ய முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிண்ணியா மற்றும் மூதூர் பகுதிகளைச் சேர்ந்த இருவரே  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட கல் 550 கிராம் நிறையுடையது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

'ராவண கல்' என்பது இலங்கையில் புராணக் கதைகளுடனும், சமீபத்திய புதையல் மோசடிகளுடனும் தொடர்புடைய ஒரு வகையான அபூர்வகல் அல்லது தொல்பொருளாகும். இது உள்ளூர் மக்களால் “சுலைமான் கல்” என்றும் அழைக்கப்படுகிறது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW