பாடசாலை முடிந்து திரும்பிய மாணவிக்கு நேர்ந்த சோகம்: பால் லொறியில் இருந்து தவறி விழுந்து பலி
நோர்வூட் பகுதியில் பால் ஏற்றிச் செல்லும் லொறியின் பின்புறத்தில் பயணித்த 13 வயது பாடசாலை மாணவி தவறி விழுந்து உயிரிழந்த பரிதாப சம்பவம் பதிவாகியுள்ளது.
நோர்வூட், வென்ச்சர் பகுதியில் பால் ஏற்றிச் செல்லும் லொறியில் பயணித்த 13 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் லொறியிலிருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கடந்த புதன்கிழமை (25) பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாடசாலையில் நடைபெற்ற விசேட பயிற்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு வீடு திரும்பிய குறித்த மாணவி, வழமையாகப் பால் விநியோகத்தில் ஈடுபடும் லொறியின்தலைப்பு பாடசாலை முடிந்து சென்ற மாணவிக்கு நேர்ந்த சோகம்: பால் லொறியிலிருந்து தவறி விழுந்து உயிர்விட்ட 13 வயது சிறுமி
செய்தி நோர்வூட், வென்ச்சர் பகுதியில் பால் ஏற்றிச் செல்லும் லொறியொன்றில் பயணித்த 13 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர், லொறியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். புதன்கிழமை (25) பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாடசாலையில் நடைபெற்ற பயிற்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு வீடு திரும்பிய மாணவி, பால் விநியோகத்தில் ஈடுபட்ட அந்த லொறியின் பின்புறத்தில் ஏறிப் பயணம் செய்துள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக லொறியிலிருந்து கீழே தவறி விழுந்து படுகாயமடைந்த மாணவி, உடனடியாக மீட்கப்பட்டு டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அங்குச் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள நோர்வூட் பொலிஸார், லொறியின் சாரதியையும் அவரது உதவியாளரையும் கைது செய்துள்ளனர்.