யாழ்ப்பாணத்தில் கணவனைத் திருவலைக் கட்டையால் அடித்துக் கொன்ற மனைவிக்கு மரண தண்டனை: முறையற்ற உறவால் நேர்ந்த சோகம்

யாழ்ப்பாணத்தில் திருமணத்திற்குப் புறம்பான உறவு காரணமாகக் கணவனைத் திருவலைக் கட்டையால் அடித்துக் கொன்ற மனைவிக்கு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.


யாழ்ப்பாணத்தில் கணவனைத் திருவலைக் கட்டையால் அடித்துக் கொன்ற மனைவிக்கு மரண தண்டனை: முறையற்ற உறவால் நேர்ந்த சோகம்

யாழ்ப்பாணத்தில் கணவனைத் திருவலைக் கட்டையால் தலையில் தாக்கிப் படுகொலை செய்த மனைவிக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணைகள் நேற்று முன்தினம் (25) எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19 ஆம் திகதி, அரியாலை பூம்புகார் பகுதியில் ஒரு பிள்ளையின் தந்தையான 32 வயதுடைய நபர் ஒருவர் திருவலைக் கட்டையால் தாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

இச்சம்பவம் குறித்துப் பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணைகளில், கொல்லப்பட்டவரின் மனைவிக்குப் பிறிதொருவருடன் திருமணத்திற்குப் புறம்பான உறவு இருந்தது தெரியவந்ததுடன், அந்த உறவிற்காகவே மனைதியே கணவனைத் திருவலைக் கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ளமையும் கண்டறியப்பட்டது. இதனையடுத்து, கொலையானவரின் மனைவியும் அவருடன் தொடர்பில் இருந்த நபரும் கைது செய்யப்பட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை நிறைவுக்கு வந்ததை அடுத்து, பிரதிவாதிக்கு எதிரான கொலைக் குற்றச்சாட்டு சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டதாக நீதிபதி தெரிவித்தார். இதனையடுத்துக் குற்றவாளியாகக் காணப்பட்ட மனைவிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அதேவேளை, மனைவியுடன் தொடர்பில் இருந்ததாகக் கைது செய்யப்பட்ட மற்றைய நபர் மீதான குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்படாததால், சந்தேகத்தின் பலனால் அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க