பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கையாளர்கள் மாயம்: கண்காணிப்பு குறைபாடே காரணம்!

Published on: 12 Dec 2025, 06:35 pm

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

அதன்பின் அவர்கள் எங்கு செல்வார்கள் என்பது யாருக்கும் தெரியாத நிலையில், அவர்கள் சமூகத்தின் பார்வைக்கு அப்பாற்பட்டு மறைந்துவிடுகிறார்கள் என்று அவர் கவலை தெரிவித்தார்.

பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கையாளர்கள் மாயம்: கண்காணிப்பு குறைபாடே காரணம்!

பிரித்தானியாவின் புகலிட அமைப்பில் கண்டுபிடிக்கப்பட்ட முக்கிய குறைபாட்டைப் பற்றி கவனம் ஈர்க்கும் வகையில், இங்கிலாந்தின் ஒரு பகுதியிலுள்ள ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ள புகலிடக்கோரிக்கையாளர்கள் கண்காணிப்பின் பற்றாக்குறையால் தொடர்ந்து மாயமாகி வருவதாக அங்கு பணிபுரியும் ஒப்பந்ததாரர் ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார்.

ஹோட்டலில் தங்கியிருக்கும் ஒருவர் ஒரு வாரத்துக்கு திரும்பவில்லை என்றால், அவர் “மாயமானவர்” என வகைப்படுத்தப்படுகிறார். சில சமயங்களில் வாரத்திற்கு ஒருமுறை இத்தகைய மாயம் நிகழ்கிறது; சில வேளைகளில், தினமும் கூட ஒருவரோ இருவரோ மறைந்துவிடுவார்கள் என அவர் கூறுகிறார்.

புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரிகள் நேரடியாக ஹோட்டலில் வந்து தகவல் தருவதில்லை என்பதும், அந்தத் தகவல் கிடைத்த தருணமே பலர் தன்னிச்சையாக ஹோட்டலை விட்டு வெளியில் செல்லுகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார். 

அதன்பின் அவர்கள் எங்கு செல்வார்கள் என்பது யாருக்கும் தெரியாத நிலையில், அவர்கள் சமூகத்தின் பார்வைக்கு அப்பாற்பட்டு மறைந்துவிடுகிறார்கள் என்று அவர் கவலை தெரிவித்தார். இது பொதுப் பாதுகாப்பு விடயமாகவும் மாறக்கூடும் எனவும் அவர் எச்சரித்தார்.

இதற்கு பதிலளித்த பிரித்தானிய உள்துறை அலுவலக செய்தித்தொடர்பாளர், புகலிடக்கோரிக்கையாளர்கள் ஹோட்டல்களில் தங்கும் நடைமுறையை நிறுத்த உள்ளதாக அறிவித்தார். 

கடந்த நாட்களில் வாழ அனுமதி இல்லாத 50,000 பேரை கைது செய்து நாடு கடத்தியதாகவும், ஹோட்டலிலிருந்து திரும்பாதவர்களை தேடுவதற்கான சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். 

மேலும், ஹோட்டலுக்கு திரும்பாதவர்களுக்கு வழங்கப்பட்டுவந்த நிதி உதவி நிறுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW