புதிதாகப் பிறந்த குழந்தை கொடுத்த'கூல் போஸ்': வைரலாகும் காணொளி
கெய்ரோ வைத்தியசாலையில் பிறந்த சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தை வைத்தியர் பரிசோதனையின்போது கைகளை தலைக்குப் பின்னால் வைத்து கால்களை குறுக்கிட்டு 'கூல் போஸ்' கொடுத்த காணொளி உலகளவில் வைரலாகி வருகிறது.
எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் உள்ள ஒரு வைத்தியசாலையில் பிறந்த பச்சிளம் குழந்தை ஒன்று, வைத்தியர்களின் பரிசோதனையின்போது பெரியவர்களைப் போல 'கூல் போஸ்' கொடுத்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகிப் பரவி வருகிறது.
கெய்ரோ வைத்தியசாலையில் பிறந்த சில மணி நேரங்களே ஆன அந்தப் பச்சிளம் குழந்தைக்கு, குழந்தை நல வைத்தியர்கள் வழக்கமான ஸ்டெதாஸ்கோப் பரிசோதனைகளை மேற்கொண்டனர். அப்போது வைத்தியப் படுக்கையில் படுத்திருந்த அக்குழந்தை, எந்தவிதப் பதற்றமும் அல்லது பயமும் இன்றி, தனது இரண்டு கைகளையும் தலைக்குப் பின்னால் முட்டுக் கொடுத்துக்கொண்டு, கால்களை ஒன்றின் மேல் ஒன்றாகப் போட்டவாறு மிகவும் இயல்பாகவும் 'கூல்' ஆகவும் படுத்திருந்தது.
இந்த வினோதமான மற்றும் நெகிழ்ச்சியான காட்சியைக் கண்டு ஆச்சரியமடைந்த அங்கிருந்த குழந்தை நல வைத்தியர், அதனை வீடியோவாகப் பதிவு செய்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் பரவி உலகளவில் வைரலாகி வருகிறது.
புதிதாகப் பிறந்த குழந்தைகளின் இயல்பான அசைவுகள் மற்றும் அவர்களின் தனித்துவமான போஸ்கள் பெரும்பாலும் பெற்றோர் மற்றும் பொதுமக்களின் கவனத்தை ஈர்ப்பவையாகவே உள்ளன, இந்தக் காணொளியும் அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக மாறியுள்ளது.